யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் JK பாய் தனது வீட்டினை பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியாக ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் JK பாயினது வீட்டின் வீடியோ தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….
