Home இலங்கை சமூகம் சில பாடசாலைகளுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சில பாடசாலைகளுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0

டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளின்பட்டியல் விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

131 பாடசாலைகள்

இதன்படி, சமூக பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த பாடசாலைகளின் பெயர்களையே
வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஏற்கனவே குறித்த பாடசாலைகளின் பட்டியலைத்
தொகுத்துள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, ஆய்வு செய்யப்பட்ட பாடசாலைகளில்; 131 பாடசாலைகளில்
டெங்கு பரவும் இடங்கள் கண்டறியப்பட்டன.

அதே நேரத்தில் 37 பாடசாலைகளில் டெங்கு உருவாக்கம் பெறும் இடங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 718 அரச நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 214
இடங்கள், நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version