Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்: தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்: தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை

0

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் சில ஆசிரியர்கள் இணைந்து பாடசாலை நிகழ்வு
ஒன்றுக்காக தமது வங்கிக் கணக்குகளில் நிதி சேகரித்த விடயம் தொடர்பாக தேசிய
கணக்காய்வு அலுவலகம் கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளது.

முறைப்பாட்டாளர் முன்வைத்த ஆதாரங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு
அமைவாக அதன் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வினாவப்பட்டதற்கு அமைவாகவே குறித்த
பதிலில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2019ஆம் ஆண்டு கணக்காய்வு சட்டம் 19 – பந்தி 9 இன்படி கணக்கீட்டு படிமுறையின்
இடைநிலை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டறிக்கை

குறித்த திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் பதில் எமது
ஐயங்களை உறுதிசெய்யும் பட்சத்தில் எமது ஆண்டறிக்கையில் பதியப்பட்டு
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version