Home இலங்கை சமூகம் முடிவுக்கு வரும் அரிசி இறக்குமதி: வர்த்தக அமைச்சரின் எச்சரிக்கை

முடிவுக்கு வரும் அரிசி இறக்குமதி: வர்த்தக அமைச்சரின் எச்சரிக்கை

0

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்கள் அரிசியை இறக்குமதி செய்தால் அவை திருப்பி அனுப்பப்படும் என வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு காரணமாக, அரிசியை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

இறக்குமதி 

இதன்படி, இதுவரையில் 75,000 மெட்ரிக் தொன் அரிசியை தனியார் துறை இறக்குமதி செய்துள்ளது.

அதன்படி, அந்த அரிசியில் 32,000 மெட்ரிக் தொன் பச்சை அரிசியும் 43,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

YOU MAY LIKE THIS…


https://www.youtube.com/embed/eKuZDktJN1o

NO COMMENTS

Exit mobile version