Home இலங்கை சமூகம் ஷானி அபேசேகரவை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்க நடவடிக்கை

ஷானி அபேசேகரவை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்க நடவடிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலிஸ் சேவைக்கு மீண்டும் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

இதன்படி அவர் மீண்டும் சேவையில் இணைந்து, முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உறுதியளித்தப்படி, இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம்

ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அவர், இந்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அத்துடன் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிக்கொட கொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்தார்.

எனினும், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலம் ஆரம்பமானதும், அவர், குற்றப்புலனாய்வு துறை அத்தியட்சகர் நிலையில் இருந்து, பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

பொய்யான சாட்சி

பின்னர், பொய்யான சாட்சிகளை புனைந்தார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போது, விடுதலை செய்யப்பட்ட அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயகவுக்கு ஆதரவு வழங்கினார்.

NO COMMENTS

Exit mobile version