Home இலங்கை அரசியல் மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.

அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆலோசனை

இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version