Home இலங்கை சமூகம் பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை வைத்தியர்களை நாட்டுக்கு திரும்ப பெற நடவடிக்கை

பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை வைத்தியர்களை நாட்டுக்கு திரும்ப பெற நடவடிக்கை

0

இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களை மீண்டும் நாட்டிற்கு திரும்பப்பெறுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி தான் அண்மையில் மேற்கொண்ட பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமூக வலைத்தள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்தியர்கள்

இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தக் கலந்துரையாடலின்போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள எமது விசேட வைத்திய நிபுணர்களை, நாடு திரும்புவது குறித்துப் பரிசீலிக்குமாறு ஒரு விசேட வேண்டுகோளை விடுத்தேன்.

எமது சுகாதார சேவையில் தற்போது விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

அவர்கள் இலங்கைக்குத் திரும்பிப் பணியாற்றினால், அவர்களின் அனைத்து முந்தைய சேவைப் பலன்களுடன் சேர்த்து அதே பதவிகளில் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version