Home சினிமா நெகட்டிவ் விமர்சனம்.. YouTube Channel-களுக்கு தடை.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

நெகட்டிவ் விமர்சனம்.. YouTube Channel-களுக்கு தடை.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

0

தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவு

சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்திற்கு மிகவும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. கங்குவா படத்திற்கு மட்டுமின்றி இதற்குமுன் சில திரைப்படங்களுக்கு மக்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

முதல் காட்சி முடிந்தபின், இந்த விமர்சனங்கள் உடனடியாக YouTube Channel மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவருவதால், படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 6 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த நிலையில், இந்த விஷயம் குறித்து, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில்,

“இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review மற்றும் Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது”.

“அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review மற்றும் Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version