Home சினிமா மறக்கமாட்டேன்.. அஜித் குறித்து பிரபல நடிகர் சொன்ன அந்த விஷயம் வைரல்

மறக்கமாட்டேன்.. அஜித் குறித்து பிரபல நடிகர் சொன்ன அந்த விஷயம் வைரல்

0

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், தொடர்ந்து சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பார்க்க மகளுடன் வந்த நடிகை ஷாலினி.. வீடியோ வைரல்

அந்த விஷயம்

இந்நிலையில், படத்தின் வில்லன் அர்ஜூன் தாஸ் உருக்கமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ” என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார்.

உங்களுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளையும் என் நினைவில் வைத்து போற்றுவேன். உங்கள் அன்பு, பெருந்தன்மை, அறிவுரைகள், உரையாடல்கள், கலகலப்பான அந்த நினைவுகள் அனைத்தையும் என் வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.   

NO COMMENTS

Exit mobile version