Home சினிமா கைகூடாமல் போன ரஜினியின் முதல் காதல்! யார் அந்த பெண் தெரியுமா.. நடிகர் கூறிய தகவல்

கைகூடாமல் போன ரஜினியின் முதல் காதல்! யார் அந்த பெண் தெரியுமா.. நடிகர் கூறிய தகவல்

0

ரஜினிகாந்த்

உலகளவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கைவசம் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் கைகூடாமல் போன காதல் கதை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தனது காதல் கதையை பிரபல நடிகர் தேவன் இடம் கூறியுள்ளார் ரஜினி. அதனை நடிகர் தேவன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

ஜேஜே பட ஹீரோயினை நினைவு இருக்கா..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

ரஜினியின் முதல் காதல்

உங்களுக்கு முதல் காதல் இருக்கிறதா? என ரஜினியிடம் கேட்டேன். ஆம் இருக்கிறது என அவர் கூறினார். சொல்லுங்க சார் உங்க காதல் கதையை என கேட்டேன். அவர் கூறினார். அது மிகவும் அழகான காதல் கதை. முடிவிற்கு வரும்போது அவர் கண்கலங்கிவிட்டார்.

“அன்று அவள் சொன்னால் உங்களுடைய படத்தின் போஸ்டர் நான் பார்க்கணும், கட்டவுட் நான் பார்க்கணும், நீங்க ஒரு பெரிய நடிகர் ஆகணும் என சொல்லிட்டு சென்றுவிட்டாள், அன்றில் இருந்து நான் அவளை தேடி கொண்டுதான் இருக்கிறேன். பார்க்க முடியவில்லை” என ரஜினி கூறியுள்ளார். இதுதான் ரஜினிகாந்தின் முதல் காதல் கதை என நடிகர் தேவன் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். 

NO COMMENTS

Exit mobile version