தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார்.
இவர் இயக்கியும், நடித்தும் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்தை தொடர்ந்து, தற்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
சினிமாவில் பிஸியாக வலம் வரும் தனுஷ் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். சமீபத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சொன்ன விஷயம்
இந்நிலையில், தனுஷ் யாரடி நீ மோகினி பட சமயத்தில் நயன்தாராவுடன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிக்கப்போகும் அடுத்த படம்.. வெறித்தனமான அப்டேட் இதோ
அதில், ” என் மகன் காஸ்ட்லி பொருட்களை உடைப்பதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறான். விலையில் குறைவாக இருக்கும் பொருட்களை எல்லாம் அவர் தொட மறுக்கிறார்.
நான் அவனிடம் சென்று “டேய் உன் தாத்தாதான் சூப்பர் ஸ்டார் உன் அப்பா இல்லை” என்று கூறுவேன். அப்போதும் மதிக்கமாட்டான். என் அம்மாவிடம் கூறினால் நீயும் அது போன்று தான் சிறு வயதில் இருந்தாய் என்று கூறி வாயை அடைத்துவிடுகிறார்” என்று பேசியுள்ளார்.