Home சினிமா அஜித்துக்கு பதில் நான் தான்.. பிரபல நடிகர் கொடுத்த அதிரடி தகவல்

அஜித்துக்கு பதில் நான் தான்.. பிரபல நடிகர் கொடுத்த அதிரடி தகவல்

0

சரவணன்

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரவணன். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சரவணன் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல கோடி சம்பளம், வாடகை வீட்டுக்கு மாறும் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன?

அதிரடி தகவல்  

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படம் குறித்து சரவணன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” பல படங்களை நான் மிஸ் பண்ணி இருக்கிறேன். அதில் ஒன்று காதல் கோட்டை படம். இந்த படம் எனக்காக உருவாக்கப்பட்டது தான். இந்த திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொன்னார்.

ஆனால் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. அந்த படத்தில் பல ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என்று சொன்னார்கள்.

ஒரு முறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை, கடைசியில் அந்த வாய்ப்பு அஜித்திற்கு போனது” என்று தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version