Home சினிமா குட் பேட் அக்லி படத்தில் நடிக்க மறுத்த பிரேமலு நடிகர்.. அவரே கூறிய காரணம்

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க மறுத்த பிரேமலு நடிகர்.. அவரே கூறிய காரணம்

0

குட் பேட் அக்லி 

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் சில தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

கண் கவரும் அழகில் NEEK பட இளம் நடிகை அனிகா சுரேந்தர் லேட்டஸ்ட் ஸ்டில் வைரல்

காரணம் 

இந்த படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று பலர் எதிர்பார்த்த நிலையில், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஒரு நடிகர் மறுத்துள்ளார்.

அது வேறுயாருமில்லை ‘பிரேமலு’ படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் தான். இதற்கான காரணம் குறித்து நஸ்லேன் தெரிவித்துள்ளார்.

அதில், “குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க இயக்குநர் ஆதிக் என்னை அணுகி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடித்து வந்தேன். இதனால், குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.       

NO COMMENTS

Exit mobile version