Home சினிமா அவரது ரோல் தான் படத்திற்கு இதை செய்தது.. நடிகர் சசிகுமார் உடைத்த விஷயம்

அவரது ரோல் தான் படத்திற்கு இதை செய்தது.. நடிகர் சசிகுமார் உடைத்த விஷயம்

0

சசிகுமார் 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர் என மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சசிகுமார். இவர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் என பலர் நடிக்க வெளியான இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இலங்கையை பின்னணியில் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மாஸ் வசூல் வேட்டை செய்த படமாக, 2025ன் ஹிட் படமாக டூரிஸ்ட் பேமிலி அமைந்துள்ளது.

தந்தை இறந்த நேரத்திலும் நீயா நானா கோபிநாத் செய்த செயல்.. அதிர்ச்சி தகவல்

இதை செய்தது

இந்நிலையில், சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதை சொல்லும் போது என்ன செய்தாரோ, அதைத்தான் நான் செய்தேன். அதனால் தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்துள்ளது.

மேலும் இயக்குநர் அபிஷன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரது ரோல் படத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான பலம் கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.      

NO COMMENTS

Exit mobile version