Home சினிமா 42 வயது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு! இதோ பாருங்க

42 வயது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு! இதோ பாருங்க

0

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் முறையாக உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் எஸ்டிஆர் 49, எஸ்டிஆர் 50 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாள்

இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சமந்தா இவரை காதலிக்கிறாரா? கைகோர்த்து இருக்கும் ஸ்டில்கள் வைரல்! அவர் யார் தெரியுமா?

சொத்து மதிப்பு 

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

சிம்புவிடம் ரூ.1.20 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்பயர் மற்றும் ரூ. 26.60 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் ஆகிய சொகுசு கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version