Home சினிமா இது மிகவும் முட்டாள்தனமானது, தகுதியற்றவர்கள் செய்யும் செயல்.. ரசிகர்கள் குறித்து சூரி ஆதங்கம்

இது மிகவும் முட்டாள்தனமானது, தகுதியற்றவர்கள் செய்யும் செயல்.. ரசிகர்கள் குறித்து சூரி ஆதங்கம்

0

 சூரி

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் இன்று வெளிவந்த திரைப்படம் மாமன்.

எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 பட மாஸ் அப்டேட்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஆதங்கம் 

இன்று மாமன் படம் வெளியான நிலையில், சூரியின் ரசிகர்கள் படம் வெற்றி பெற வேண்டி மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சூரி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை என் தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது.

இது மிகவும் முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். இது போன்ற செயலை செய்பவர்கள் என் ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.   

    

NO COMMENTS

Exit mobile version