Home சினிமா மாஸ் வசூல் வேட்டை செய்த சூரியின் மாமன் திரைப்படம் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

மாஸ் வசூல் வேட்டை செய்த சூரியின் மாமன் திரைப்படம் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

0

சூரியின் மாமன்

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர்.

இவர் எல்லாரையும் போல இப்போது கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்து வருகிறார். அதற்கு முதல் படமாக அமைந்தது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை.

சமீபத்தில் சூரி நாயகனாக நடிக்க மிகப்பெரிய வெற்றியடைந்த படம் தான் மாமன்.

பெண்களே பொறாமை படும் பேரழகு கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகர்.. வைரலாகும் போட்டோ, யார் தெரியுமா?

விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிக்க இந்த படம் கடந்த மே 16ம் தேதி வெளியானது.

ஓடிடி ரிலீஸ்

அக்கா மகன் பாசத்தை மையமாக கொண்டு உருவான இந்த மாமன் திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.

ரூ. 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ. 35 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.
திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இப்படம் வரும் ஜுன் 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version