Home சினிமா சினேகாவுக்கு நடந்த பயங்கர விபத்து, ஓடிய ரத்தம், உடைந்த கண்ணாடிகள்… ஷாக்கிங் தகவல் சொன்ன நடிகர்

சினேகாவுக்கு நடந்த பயங்கர விபத்து, ஓடிய ரத்தம், உடைந்த கண்ணாடிகள்… ஷாக்கிங் தகவல் சொன்ன நடிகர்

0

நடிகை சினேகா

நடிகை சினேகா, 42 வயதாகும் இவர் ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட் சென்றாலும் சினிமாவில் நிறைய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்போது விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், விஜய்-சினேகா இடம்பெறும் படத்தின் ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. படங்களை தாண்டி சினேகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் சினேகா சொந்தமாக ஒரு புடவை கடையையும் திறந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்த சினேகா குறித்து நமக்கு தெரியாத தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.

ஷாக்கிங் தகவல்

நடிகை சினேகா, ஸ்ரீகாந்துடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்துள்ளார்.

அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், ஏப்ரல் மாதத்தில் நடித்துக் கொண்டிருந்த போது எனக்கும் சினேகாவிற்கும் விபத்து ஆகிவிட்டது.

இரண்டு பேருமே வெவ்வேறு மருத்துவமனையில் இருந்து வந்து தான் இந்த படத்தில் நடித்தோம். சினேகாவிற்கு நடந்த அந்த பயங்கர விபத்தை நினைக்கும் போது இப்போதும் சிலிர்த்து விடுகிறது.

அவரது கார் விபத்து ஏற்பட்டு சினேகா ரத்த வெள்ளத்தில் இருந்தார்.

அவருடைய முதுகெலும்பு உடைந்து போயிருக்கும் நிலையில் அவர் இருந்தார். கார் கதவுகள் திறக்க முடியாமல், கண்ணாடிகள் எல்லாம் உடைந்து போனது.

அந்த சம்பவத்தை என்னால் மீண்டும் நினைத்து பார்க்க முடியவில்லை, அந்த நிலையில் சினேகா இருந்தார். அப்போது எனக்கும் ஒரு விபத்து ஏற்பட, இருவருமே மருத்துவமனையில் இருந்து வந்து தான் படத்தில் நடித்து முடித்தோம் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version