டெலிபோன் சுப்பிரமணி
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்பே தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றித்தால், டெலிபோன் சுப்பிரமணி என அழைக்கப்பட்டார்.
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் சுப்பிரமணி நடித்துள்ளார்.
குபேரா படத்தின் கதை இதுதானா! இணையத்தில் லீக்..
குறிப்பாக மறைந்த நடிகர் விவேக் உடன் இவர் நடித்த ஹோட்டல் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
மரணம்
இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் டெலிபோன் சுப்பிரமணி கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று காலமானார். இவர் வயது 67. இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் தந்துள்ளது.
