Home சினிமா வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து பிரபல நடிகர் பலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து பிரபல நடிகர் பலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நடிகரும் குரல் கலைஞருமான டோனி ஜெர்மனோ தனது வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

55 வயதான அவர் Beauty and the Beast மற்றும் Nicky, Ricky, Dicky & Dawn மற்றும் The Muppets போன்ற தொடர்களுக்கும் குரல் கொடுத்து இருக்கிறார்.

மரணம்

கடந்த நவம்பர் 26ம் தேதி அவரது வீட்டின் கூரையில் சில புனரமைப்பு பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அவர் துரதிஷ்டவசமாக அங்கிருந்து கீழே விழுந்து இருக்கிறார்.

அதில் அவர் படுகாயம்அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்து இருக்கின்றனர்.
 

NO COMMENTS

Exit mobile version