Home சினிமா விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்! வீல் சேரில் வந்ததால் அதிர்ச்சி

விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்! வீல் சேரில் வந்ததால் அதிர்ச்சி

0

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பவர் மலையாள நடிகர் விநாயகன். அவர் ஜெயிலர் 2ம் பாகத்திலும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இறந்துவிட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் ரோல் எப்படி வர போகிறது என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தற்போது மலையளத்தில் ஆடு 3 என்ற படத்தில் விநாயகன் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங்கில் அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வீல் சேர்

ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கழுத்தை அசைக்க முடியாமல் வீல் சேரில் வந்தார் அவர்.

கழுத்து தோள்பட்டையில் dislocation, nerve பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது, அதை அப்படி விட்டு இருந்தால் paralyze ஆகி இருப்பேன் என விநாயகன் கூறி இருக்கிறார்.

இன்னும் 6 வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்களாம். 

NO COMMENTS

Exit mobile version