நடிகர் யாஷ்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். முதலில் கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்
ராக்கி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
ஆனால், இப்படம் படு தோல்வியடைய பின் மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து நடித்து வந்தார். தொடர்ந்து நடித்து வந்த யஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கேஜிஎப் திரைப்படம்.
நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு.. அண்ணி கொடுத்த புகார், நடந்தது என்ன?
இப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக சினிமாவில் வலம் வருகிறார். தற்போது, யாஷ் இராமாயணம் மற்றும் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் Toxic என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் மாஸ் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் யாஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இவரின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவர் டாக்ஸிக் படத்திற்காக ரூ. 80 கோடியும், இராமாயணம் படத்திற்காக ரூ. 200 கோடியும் சம்பளம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால், அடுத்த ஆண்டு ரூ. 300 கோடிக்கு மேல் இவருடைய சொத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.