Home சினிமா இது போன்ற படங்கள்.. தனுஷின் NEEK படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு

இது போன்ற படங்கள்.. தனுஷின் NEEK படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவராக உலா வருகிறார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படத்தை தொடர்ந்து, நேற்று தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் ஹீரோவாக பவிஷ் நாராயணன் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி,வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த இயக்குநர்

கீர்த்தி சுரேஷ் பாராட்டு 

இந்நிலையில், நேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டி உள்ளார்.

அதில், “இப்படியொரு அழகான லவ் ஸ்டோரி படத்தை பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது. இந்தப் படத்தை தனுஷ் இயக்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version