Home சினிமா 33 வயதில் முதல் குழந்தைக்கு தாயான நடிகை கியாரா அத்வானி.. குவியும் வாழ்த்துக்கள்

33 வயதில் முதல் குழந்தைக்கு தாயான நடிகை கியாரா அத்வானி.. குவியும் வாழ்த்துக்கள்

0

நடிகை கியாரா அத்வானி

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடித்து வந்த கியாரா அத்வானி ராம் சரணின் நடிப்பில் வெளிவந்த வினய் விதேயே ராமா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் மனைவி சங்கீதா தான் சமைப்பாங்க, வகை வகையா சாப்பாடு இருக்கும்.. சஞ்சிவ், ப்ரீத்தி ஓபன் டாக்

கடந்த ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. மேலும் தற்போது வார் 2 மற்றும் டாக்சிக் ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

முதல் குழந்தை

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோற்றாவை காதலித்து கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கர்ப்பமாக இருந்து வந்த நடிகை கியாரா அத்வானிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கியாரா – சித்தார்த் தம்பிக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version