குஷ்பு
நடிகை குஷ்பு, தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு பிரபலம்.
குஷ்பு இட்லி, கொண்டை, ஜாக்கெட், இவருக்கு என்று கோவில் என 80களில் கலக்கிய நடிகைகளில் இவருக்கு என்று நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் நடந்துள்ளது.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 185 படங்களுக்கு மேல் நடித்தவர் தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளாராம்.
சின்னத்திரை
படங்களில் நடிப்பது தாண்டி தொகுப்பாளினியாக, சீரியல் நடிகையாகவும் வலம் வருகிறார். 1995ம் ஆண்டு சின்ன சின்ன ஆசை உறவு என்ற சன் டிவி சீரியலில் நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து நிறைய நடித்துள்ளார்.
அப்படி தற்போது நடிகை குஷ்பு நடிக்கப்போகும் புதிய தொடர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டிடி தமிழ் தொலைக்காட்சியில் சரோஜினி என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம், அதில் குஷ்பு நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அண்மையில் இந்த சீரியலுக்கான பூஜை போடப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.