Home சினிமா நடிகர் அஜித் இப்படிப்பட்டவரா? 90ஸ் நடிகை சொன்ன தகவல்

நடிகர் அஜித் இப்படிப்பட்டவரா? 90ஸ் நடிகை சொன்ன தகவல்

0

நடிகர் அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.

இதில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லி திரைப்படம் மாஸ் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 246 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நடிகை த்ரிஷாவின் திரைப்படம்.. இந்த ஹிட் படமா?

நடிகர் அஜித் குறித்து திரையுலகில் உள்ள பலரும் தங்களது கருத்துக்களை பகிர்வார்கள். அதே போல் அவருடன் பணியாற்றிய பலரும் அவர் எப்படி என்பது குறித்து பேட்டிகளில் கூறியுள்ளனர்.

அஜித் குறித்து பேசிய நடிகை

இந்த நிலையில், அஜித்துடன் உல்லாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மஹேஸ்வரி சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “அஜித் சார் ஒரு ஜென்டில்மேன். அவர் க்யூட், அழகு, சூப்பர்ஸ்டார் என்பதை விட, நல்ல மனிதர். அவர் கலாச்சாரம் தெரிந்து, நன்கு வளர்க்கப்பட்ட ஒருத்தர். எப்பவும் மற்றவர்களை பற்றி யோசிப்பார். நிறைய பேர் அப்படி இருக்க மாட்டாங்க” என கூறியுள்ளார். அஜித் குறித்து நடிகை மஹேஸ்வரி பேசியது தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version