Home சினிமா படப்பிடிப்பில் என்ன நடந்தாலும் விஜய் அதை செய்வார்.. ஓப்பனாக சொன்ன மமிதா பைஜு

படப்பிடிப்பில் என்ன நடந்தாலும் விஜய் அதை செய்வார்.. ஓப்பனாக சொன்ன மமிதா பைஜு

0

விஜய் 

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தில், பூஜா, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், நரேன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையமைப்பில் தயாராகும் இப்படம் அரசியல் சார்ந்த கதைக்களத்தை கொண்டது. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது.. நடிகர் அதர்வா உருக்கம்

ஓபன் டாக் 

இந்நிலையில், விஜய் குறித்து நடிகை மமிதா பைஜு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” விஜய் சார் நேரம் தவறாதவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். மிகவும் கூலானா நபர்.

ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை மிகவும் கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களைப் பேசுவேன். அதற்கு அவர் ‘ம்ம்’ ‘ஹா’ன்னு சொல்லி முடித்து விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version