Home சினிமா நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? அழகிய புகைப்படம் இதோ

நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? அழகிய புகைப்படம் இதோ

0

மெகா ஆகாஷ்

தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை மேகா ஆகாஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இவருக்கு அறிமுகம் கொடுத்தது.

இதன்பின் சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

40 வருடங்களுக்கும் மேலாக நாயகனாக கலக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு… இத்தனை கோடியா?

கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் ஆன்டனியுடன் இவர் இணைந்து நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளிவந்திருந்தது. மேலும் தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம் 

இந்த நிலையில், நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version