Home சினிமா நயன்தாரா ஆவணப்பட வழக்கு.. நீதிபதியின் அதிரடி முடிவு என்ன தெரியுமா?

நயன்தாரா ஆவணப்பட வழக்கு.. நீதிபதியின் அதிரடி முடிவு என்ன தெரியுமா?

0

நயன்தாரா – தனுஷ் 

நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதாவது, தனது திருமண ஆவண படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த அனுமதி பல முறை கேட்டும் தனுஷ் கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.

அனிருத் இதை செய்ய வேண்டும்.. ஏ.ஆர்.ரகுமான் கேட்ட அந்த விஷயம் என்ன தெரியுமா?

இந்த அறிக்கை வெளிவந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. தனுஷ் அனுமதி கொடுக்காத நிலையிலும், தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார் நயன்தாரா.

இதனால் தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

அதிரடி முடிவு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறி தள்ளிவைத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version