Home இலங்கை குற்றம் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

0

மட்டக்களப்பு (Batticaloa) – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியில்
சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால்
தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என கொக்குவில்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் கைது 

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைஞரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை, உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/man-killed-for-driving-motor-cycle-loudly-1727560938

NO COMMENTS

Exit mobile version