நடிகை ரச்சிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சயமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
முதல் தொடரே அவருக்கு ரீச் கொடுக்க அடுத்தடுத்து சீரியல்கள் நடித்தவருக்கு சரவணன் மீனாட்சி தொடர் பெரிய வாய்ப்பாக அமைந்தது. முதல் பாகத்தை தொடர்ந்து 2, 3 பாகங்களிலும் நடித்தவர் ஜீ தமிழ் பக்கம் சென்று நாச்சியார்புரம் நடித்தார்.
கடைசியாக அவர் நடித்த சீரியல் என்றால் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை தான், அதன்பின் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் தலைக்காட்டி வந்தார்.
இந்த ஆண்டு ரச்சிதா நடித்த Fire திரைப்படம் வெளியாகி மாஸ் வெற்றியை கண்டது.
வீடியோ
தமிழை தாண்டி கன்னட படங்களிலும் பிஸியாக நடித்துவரும் ரச்சிதா இப்போது USAவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு விமானத்தில் Co Pilotஆக அமர்ந்து அவர் பயணம் மேற்கொண்ட வீடியோவை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
