Home சினிமா 26 வருடங்களுக்கு பின் மீண்டும் படையப்பாவுடன்.. ஜெயிலர் 2 புகைப்படத்தை வெளியிட்டு ரம்யா கிருஷ்ணன் உருக்கம்

26 வருடங்களுக்கு பின் மீண்டும் படையப்பாவுடன்.. ஜெயிலர் 2 புகைப்படத்தை வெளியிட்டு ரம்யா கிருஷ்ணன் உருக்கம்

0

ஜெயிலர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

தனுஷ் பட நடிகையா இது.. கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ

உருக்கம் 

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கும் மனைவியாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அதில், “படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு பெற்றதாகவும், ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என்றும் பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.    

NO COMMENTS

Exit mobile version