ரவீனா தாஹா
ரவீனா தாஹா, இவரது பெயரை கேட்டதும் முதலில் இவரது ஒரு நடன கலைஞர் என்பது தான் அனைவருக்கும் நியாபகம் வரும்.
பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன், டிமான் என பல படங்கள் நடித்துள்ள இவர் தங்கம், பூவே பூச்சூடவா, மௌன ராகம் 2 போன்ற தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்ற விளையாடியுள்ளார்.
விலகிய நடிகை
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருந்த சிந்து பைரவி தொடரில் நடிக்க கமிட்டாகியிருந்தார். இவரது கதாபாத்திரம் இடம்பெறும் புரொமோவும் வெளியாகி இருந்தது.
தற்போது என்னவென்றால் ரவீனா இன்னும் ஒளிபரப்பவே ஆரம்பிக்காத இந்த தொடரில் இருந்து விலகியுள்ளாராம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.