பின்னணி பாடகி சுசித்ரா
சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான ஹிட் பாடல்களை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானவர் சுசித்ரா.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமாக விளங்கினார்.
சுசித்ரா கரியர் பீக்கில் சென்று கொண்டிருந்தபோது பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
அதாவது, சுச்சி லீக்ஸ் என்ற அவர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் பல வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னணி நடிகர்கள் படம் ஓடும் ஆனால் மற்றவர்கள் நிலைமை.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பார்த்திபன்
சர்ச்சை பேச்சு
அதன்பின் சற்று அமைதியான சுசித்ரா, மீண்டும் பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டிகளில் பேசி கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் சுசித்ரா நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி நடத்தியதாக கூறி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், சுசித்ரா என்னை பற்றி ஆதாரம் இல்லாமல் தவறாக பேசியுள்ளார் என கூறி கொச்சி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருக்கிறார் ரீமா கல்லிங்கல்.