Home சினிமா அதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் இல்லை…ஓபனாக கூறிய நடிகை ரெஜினா கசான்ட்ரா

அதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் இல்லை…ஓபனாக கூறிய நடிகை ரெஜினா கசான்ட்ரா

0

ரெஜினா கசான்ட்ரா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக படங்கள் நடிக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா.

2005ம் ஆண்டு தமிழில் வெளியாக கண்டநாள் முதல் படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கூருகிறார்.

இப்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் ரெஜினா. அதோடு ஹிந்தியில் ஜாட் மற்றும் செக்சன் 108 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகையின் பேட்டி

இந்த நிலையில் நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் ஹிந்தியில் பட வாய்ப்புகள் பெறுவது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ஹிந்தியில் பெரும்பாலும் படப்பிடிப்பிலேயே லைவ் ஆக வசனங்களை பதிவு செய்வதால் ஹிந்தி நன்கு பேச தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.

நல்ல வேலையாக என்னுடைய அம்மா ஹிந்தி ஸ்கூலுக்கு அனுப்பி என்னை படிக்க வைத்தார். தென்னிந்திய படங்களில் மொழி ஒரு பிரச்சனையே இல்லை, எந்த மொழியை சேர்ந்தவர் என்றாலும் நடிக்க வைத்து விட்டு டப்பிங்கில் சரி செய்து கொள்கிறார்கள்.

ஹிந்தியில் கிடைக்கும வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள ஒரு தனி தனியார் புரொமோட்டிங் ஏஜென்சி மூலமாக பல நிகழச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்கு தாமதமாக தான் தெரிந்தது.

ஆனால் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் அல்ல என்று கூறியுள்ளார்.     

Source: https://cineulagam.com/article/actress-regina-cassandra-about-her-movie-offers-1731483465

NO COMMENTS

Exit mobile version