Home சினிமா தீபிகா படுகோனேவிற்கு பதிலாக பிரபாஸ் படத்தில் கமிட்டாகியுள்ள பிரபல நடிகை… வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தீபிகா படுகோனேவிற்கு பதிலாக பிரபாஸ் படத்தில் கமிட்டாகியுள்ள பிரபல நடிகை… வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

பிரபாஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட், சலார் 2 மற்றும் ராஜா சாப் உள்ளிட்ட பெரிய படங்கள் கைவசம் உள்ளது.

நாயகி தேர்வு

ஸ்பிரிட் நடிகர் பிரபாஸின் 25வது படமாகும், இதனை அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிக்கம் இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே கமிட்டாகி இருந்தார்.

ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து தீபிகா படுகோனே வெளியேற அவருக்கு பதில் திருப்தி டிம்ரி கமிட்டாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version