Home சினிமா இங்கு நான் ரவுடி பேபி தான் ஆனால்.. மனம் திறந்த நடிகை சாய் பல்லவி

இங்கு நான் ரவுடி பேபி தான் ஆனால்.. மனம் திறந்த நடிகை சாய் பல்லவி

0

சாய் பல்லவி

மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி.

இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது.

தனுஷ் நடித்த குபேரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதாவது ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சாய் பல்லவி ஓபன் 

இந்நிலையில், அமரன் படத்தின் வெற்றி விழாவில் சாய் பல்லவி பேசிய விஷயம் தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

அதில், ” தெலுங்கு சினிமாவில் எனக்கு நல்ல ரோல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நான் இங்கு ரவுடி பேபி மட்டும் தான். ஆனால், அமரன் படத்தின் இயக்குநர் தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் என்னை நடிகை சாய் பல்லவியாக காண்பித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version