Home சினிமா நயன்தாரா போன்று பாதிக்கப்பட்டுள்ளேன்.. ஆதரவு அளித்தது குறித்து தனுஷ் பட நடிகை

நயன்தாரா போன்று பாதிக்கப்பட்டுள்ளேன்.. ஆதரவு அளித்தது குறித்து தனுஷ் பட நடிகை

0

நடிகை பார்வதி

தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி. அதை தொடர்ந்து, இவர் மரியான் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பிறகு, மலையாள படங்களான சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் மூலம் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பதித்தார். சமீபத்தில், இவர் நடிப்பில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் வெளி வந்தன.

இந்த படங்களில் தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகை பார்வதி.

சூர்யா 44 அப்டேட் கொடுத்த இயக்குனர்.. ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனையில் நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்தது குறித்து பார்வதி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

காரணம் 

அதில், “லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவதற்கு தனி ஆளாக நயன்தாரா எவ்வளவு கஷ்டத்தை கடந்து இங்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இவர் ஒரு அறிக்கை வெளியிட்டால் அதில் கண்டிப்பாக உண்மைத் தன்மை இருக்கும் என உணர்ந்தேன். எனக்கு இது போன்ற ஒரு நிலை வந்தபோது எனக்கு துணையாக யாரும் வரவில்லை. அதன் வலி புரிந்ததால் தான் நான் அவருக்கு ஆதரவு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version