ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் நிறைய இளம் நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள்.
அப்படி கடந்த 2019ம் ஆண்டு வெளியான கிஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீலீலா.
அப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியடைய அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.
வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்… நடிப்பவர்கள் யார் யார் பாருங்க
தற்போது முன்னணி நடிகர்கள் பவன் கல்யாண், பாலகிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதைத்தாண்டி பிரபலங்களின் படங்களில் ஒரே ஒரு பாடலும் ஆடி வருகிறார். குர்ச்சி மாடதபெட்டி, கிஸ்சிக் ஆகிய பாடல்களில் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.
சம்பளம்
தற்போது ஹிந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ஒரு படம், தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி என நடித்து வருகிறார்.
சென்சேஷனல் நாயகியாக வலம்வரும் ஸ்ரீலீலா ஒரு படத்துக்கு இதுவரை ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். தற்போது சம்பளத்தை அதிரடியாக ஏற்றி ரூ. 4 கோடியாக வாங்க முடிவு செய்துள்ளாராம்.
