Home சினிமா 41 வயதிலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகை த்ரிஷா.. அவருடன் அழகின் ரகசியம் இதுதானா

41 வயதிலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகை த்ரிஷா.. அவருடன் அழகின் ரகசியம் இதுதானா

0

நடிகை த்ரிஷா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் லியோ. மேலும் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 41 வயதாகியும் நடிகை த்ரிஷா இளமையாக இருக்கிறார்.

அழகின் ரகசியம்

இந்த அழகிற்கு முக்கிய காரணம் இவருடைய டயட் மற்றும் ஒர்க் அவுட் என்று கூறப்படுகிறது. இவர் சிறு வயதில் இருந்தே அசைவ உணவுகளை தவிர்த்து அதிக காய்கறிகளை தன் உணவில் சேர்த்து கொள்வாராம்.

மேலும், இவர் வீட்டில் தன் அம்மா கைகளால் சமைக்கப்படும் உணவையே அதிகம் சாப்பிடுவர் என்றும் 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் போன்ற ஹோட்டல் உணவுகளை வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டுமே சாப்பிடுவர் என்றும் கூறப்படுகிறது.

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு எப்போது.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

அதைத்தொடர்ந்து த்ரிஷா தன் உடல் எடையை பராமரிக்க ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வர் எனவும் எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாராம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாக வைத்து கொண்டாலும் மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, யோகா மற்றும் மெடிட்டேஷன் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவாரம் த்ரிஷா.

மேலும், தன்னுடைய பொலிவான அழகை பராமரிக்க விட்டமின் சி நிறைந்த பழங்களை ஜூஸாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்து கொள்வாராம். இதுவே அவருடைய அழகின் ரகசியம் என சொல்லப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version