தக் லைப்
நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சிங்கிளாக இருந்து இப்போதும் ரசிகர்களை தனது அழகில் மயக்கி வருபவர்.
இவரைப் போல முன்னணி நடிகையாக இருந்த நயன்தாரா, அசின், ஜெனிலியா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் என பலரும் திருமணம் செய்து மிங்கிள் ஆக இவர் சிங்கிளாக கெத்து காட்டி வருகிறார்.
த்ரிஷா நடிப்பில் அடுத்து வரும் ஜுன் 5ம் தேதி தக் லைப் திரைப்படம் வெளியாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடிகை டுவிட்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட சுகர் பேபி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்பாடலில் வரும் என்ன வேணும் உனக்கு வரிகளை தற்போது டுவிட்டாக போட்டு த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அவரது பதிவு,
