Home சினிமா உலக சாதனை படைத்த நடிகை த்ரிஷாவின் திரைப்படம்.. அட இந்த படமா?

உலக சாதனை படைத்த நடிகை த்ரிஷாவின் திரைப்படம்.. அட இந்த படமா?

0

 த்ரிஷா

நடிகை த்ரிஷா கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். 

சூர்யாவின் ரெட்ரோ பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.

எது தெரியுமா? 

அடுத்து இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், த்ரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.

அதுவும் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை அப்படம் படைத்துள்ளது.
அதாவது, த்ரிஷா அத்தடு என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார்.

திரிவிக்ரம் இயக்கிய இப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகி உள்ளதாம். உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டது இல்லை என்று சொல்லப்படுகிறது.    

NO COMMENTS

Exit mobile version