வனிதா
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.
பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
தற்போது, வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் இணையும் தனுஷ்.. அடேங்கப்பா, இத்தனை கோடிகளா?
பரபரப்பு பேச்சு
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி மகள் குறித்து வனிதா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” நானும் தேவயானியும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். தேவயானியின் மகளோடு என் மகளை கம்பேர் செய்வது மிகவும் தவறு.
பொதுவாக நம்முடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு கம்பேர் பண்ணக்கூடாது. அவ்வாறு இருக்கும்போது, ஒரு நடிகையின் மகளோடு என்னுடைய மகளை கம்பேர் செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
