Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவுக்கு கல்முனை சாஹிராவில் கௌரவம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவுக்கு கல்முனை சாஹிராவில் கௌரவம்

0

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவிற்கு கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, நேற்றையதினம்(15.02.2025) அவரது தாய்ப்பாடசாலையான கல்முனை
கமு/கமு/ சாஹிரா தேசிய பாடசாலையில் நடாத்தப்பட்டுள்ளது.

கல்லூரியின் முதல்வர் எம். ஐ.
ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிற்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி
அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா உத்யோகத்தர்கள் அனைவரும் கலந்து
கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version