Home இலங்கை அரசியல் மோதலுக்கு தயாராகும் அதானியும் அநுர அரசாங்கமும்

மோதலுக்கு தயாராகும் அதானியும் அநுர அரசாங்கமும்

0

இலங்கையில் கைவிடப்பட்ட தங்களது காற்றாலை மின்சக்தி திட்டத்துக்கு செய்த ஆரம்ப
செலவுகளை மீளப் பெறும் விடயத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் அரசாங்க
அதிகாரிகளும் சட்ட மோதலுக்கு தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் மற்றும் பூநகரியில் முன்னெடுக்கப்படவிருந்த 442 மில்லியன் அமெரிக்க
டொலர் மதிப்பிலான காற்றாலை மின்சாரத் திட்டத்திலிருந்து அண்மையில் அதானி
க்ரீன் எனர்ஜி நிறுவனம் விலகியது.

கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதில்

புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முந்தைய ஒப்பந்த விதிமுறைகளை ஏற்க
மறுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திட்டத்தை கைவிட்ட அதானி நிறுவனம், ஆரம்ப செலவுகளை திருப்பிச்
செலுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில், நிலையான வலுசக்தி
அதிகாரசபை இது குறித்து சட்ட ஆலோசனையுடன் பரிசீலித்து வருகிறது.

எனினும், சட்ட ஆலோசனையைப் பின்பற்றி கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதில்,
இரண்டு தரப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் காரணமாக, இந்த விடயம் வழக்குகளுக்கு
வழிவகுக்கக்கூடும் என தகவலறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version