Home இலங்கை பொருளாதாரம் அதானி திட்டத்தின் நகர்வு! ஆரம்பமாகியுள்ள முக்கிய பேச்சுவார்த்தை

அதானி திட்டத்தின் நகர்வு! ஆரம்பமாகியுள்ள முக்கிய பேச்சுவார்த்தை

0

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி தரப்புக்கு இலங்கை அனுப்பிய கடிதத்திற்கான பதிலை முடிவு செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திட்டத்திலிருந்து விலகுவதா இல்லையா என்பதை 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு எரிசக்தி அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு அதானி நிறுவனம் பதிலளிக்கும் என்றும், நடந்து வரும் விவாதங்களுக்குப் பிறகு, அவர்கள் அதிகாரப்பூர்வ பதிலை அளிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அரசாங்கம் இணங்கத் தயாராக இருந்தால், முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டத்தை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாக அதானி சமீபத்தில் மின் அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

இரண்டு காற்றாலை மின் நிலையங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் 484 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் மற்றும் தொடர்புடைய மின் பரிமாற்ற அமைப்பும் கட்டப்பட உள்ளன.

மேலும் எனைய இரண்டு திட்டங்களும் 220 மற்றும் 400 கிலோவாட் திறன் கொண்ட மின் பரிமாற்ற வலையமைப்பை விரிவுபடுத்த அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version