Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மின்சார சபைக்கான நிதியை அங்கீகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கை மின்சார சபைக்கான நிதியை அங்கீகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

0

இலங்கையின் மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறிய செலவின நிதி வசதி(SEFF) ஆசிய அபிவிருத்தி வங்கியால்(ADB) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால எரிசக்தி திட்டங்களின் உறுதித்தன்மையை மேம்படுத்த இந்த நிதி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிப்பதற்கான முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிதி பயன்படும் என இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ(Takafumi Kadono) சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 

அத்துடன், 2030ஆம் ஆண்டளவில் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்வதற்காக இலங்கையை ஆதரிப்பதில் இந்த நிதி முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிதியில், 15 மில்லியன் டொலர் மொரகொல்ல நீர்மின் நிலையத்தின் செயல்பாட்டு நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்படவுள்ளது.

எஞ்சிய 15 மில்லியன் டொலரில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, கட்டம் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எளிதாக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும்.

NO COMMENTS

Exit mobile version