Home இலங்கை அரசியல் எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்

எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்

0

நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் தற்போது இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சின் அதிகாரிகள் குழுவினருக்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்புக்களை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார, எதிர்வரும் வருடத்திற்கான எரிபொருள் கொள்வனவை திறம்பட திட்டமிடுமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன், இந்த முயற்சிகளை எளிதாக்குவதற்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

முக்கியத்துவம்

மேலும், 800 பிரிவேனாக்களுக்கு இந்திய உதவியின் மூலம் பெறப்பட்ட சோலார் பேனல்களை விநியோகிக்கும் திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி திஸாநாயக்க அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் படி, இம்முயற்சியை சுமுகமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமைச்சகத்திடம் இருந்து தெளிவான சாலை வரைபடம் தேவை என்றும் ஜனாதிபி அநுர குமார வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய வெளிநாட்டுக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவித் திட்டங்கள்

வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு குழுவை நிறுவுவதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார், இந்த தீர்மானம் அவர்களின் செயல்பாட்டினை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டின் ஊடாக, வெளிநாட்டு உதவிகளால் ஆதரிக்கப்படும் திட்டங்களை மிகவும் திறமையாக செயல்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version