Home முக்கியச் செய்திகள் ரி 20 உலக கிண்ண தொடர் : சொந்தமாக சமைத்து சாப்பிடும் ஆப்கான் வீரர்கள்

ரி 20 உலக கிண்ண தொடர் : சொந்தமாக சமைத்து சாப்பிடும் ஆப்கான் வீரர்கள்

0

ரி20 உலக்கிண்ண தொடருக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு (West Indies) சென்றுள்ள ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணியினர் அங்கு தமக்கான உணவை தாமே சமைத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் இஸ்லாமிய முறைப்படி ஹலால்  உணவு வகையையே சாப்பிடுவார்கள். ஆனால் மேற்கிந்திய தீவில் ஹலால் உணவு (Halal Food) மற்றும் இறைச்சிகள் கிடைக்காத காரணத்தினாலேயே தாங்களே சமைத்து சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள், தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் மேற்கிந்திய தீவில் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

ஹலால் உணவு

இதன் காரணமாக தங்களால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் பல்வேறு நாடுகளில் ஹலால் உணவு முறைகள் கிடைப்பதில்லை என்பதால் தாங்களே சொந்தமாக சமைத்து உணவு சாப்பிடுவதாகவும் இதற்கு பல நேரம் செலவழிப்பது ஆகும் என ஆப்கான் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கடந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது அவர்களுக்கு 24 மணி நேரமும் ஹலால் உணவு கிடைத்ததாகவும், அப்போது அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்படி பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி நேற்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்தி ஆப்கான் வீரர்கள் சாதித்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version