Home உலகம் தலையிடியாக மாறிய தாலிபான் : பாகிஸ்தானுக்கு பறந்த எச்சரிக்கை

தலையிடியாக மாறிய தாலிபான் : பாகிஸ்தானுக்கு பறந்த எச்சரிக்கை

0

பாகிஸ்தான் (Pakistan) நாட்டு நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று தாலிபான் (Taliban) அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இருதரப்பினர் துப்பாக்கி சண்டையும் போட்டு கொண்டனர். இன்னும் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் இருநாட்டின் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவம்

தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தை விட டிடிபி அமைப்பினரின் கைகள் ஓங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. தாலிபான்களை பார்த்து பாகிஸ்தான் ராணுவத்தினரும் விலகி செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி சில ராணுவ நிலைகளை டிடிபி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த டிடிபி அமைப்பின் பிரதான நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானை போல் பாகிஸ்தானிலும் தாலிபான்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது தான்.

இதற்கு முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க வேண்டும். இதனை டார்க்கெட்டாக வைத்து தான் தற்போது டிடிபி அமைப்பு பாகிஸ்தானுடன் மோதலை தொடங்கி உள்ளது.

தாலிபான் 

இதனால் டிடிபி அமைப்பினரை ஒழித்து கட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து தான் டிடிபி அமைப்பு கடும் கோபம் அடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தான் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு சார்பில் பாகிஸ்தானுக்கு புதிய மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு சார்பில் இனி எல்லையில் மட்டும் ராணுவத்துடன் நாங்கள் மோதல் போக்கை நடத்த மாட்டோம். அதையும் தாண்டி பாகிஸ்தானில் உள்ள நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்.

குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம், அரசு சார்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version